கிருஷ்ணகிரி

"ஒசூர் தர்கா ஏரி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்'

DIN

ஒசூர் தர்கா ஏரி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என  ஒசூர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐஎன்டியுசி மாநில துணைத் தலைவருமான கே.ஏ.மனோகரன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலர் சத்தியமூர்த்தி ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
 ஒசூர், சிப்காட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போக்குவரத்து காவல் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து, அட்கோவுக்கு செல்ல புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை தர்கா ஏரியின் கிழக்கே அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்த சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால், அந்த வழியாகச் செல்லும் பெண்கள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மதுக் கடையில் மது அருந்திவிட்டு வருவோர் பெண்களை வம்புக்கு இழுப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. 
மேலும், இந்த மதுக்கடையில் மது அருந்துவோர் கீழே வீசி செல்லும் நெகிழி டம்ளர்களால் அப்பகுதி மாசடைந்து வருகிறது. மேலும், இந்த நெகிழி டம்ளர்கள் பெருமளவு தர்கா ஏரியில் மிதந்துக் கொண்டிருக்கின்றன.
எனவே, அந்த சாலையில் பொதுமக்கள் நிம்மதியாக செல்லவும், தர்கா ஏரியை பசுமையாக காக்கவும் உடனடியாக அங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். மேலும், ஒசூர் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அந்த சாலையில்  உள்ள நெகிழி டம்ளர்களை அகற்றி தர்கா ஏரியை சுத்தமாக்க உதவ வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT