கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9,207 குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9,207 குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் தங்களது ஆதார் எண்ணை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9,207 குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட கணினிமயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 9,207 குடும்ப அட்டைதாரர்கள், நியாய விலைக் கடைகளில் தங்களது அதார் அட்டை எண்ணை பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, இத்தகைய குடும்ப அட்டைதாரர்கள், நியாய விலைக் கடைகளில் தங்களது அதார் அட்டை எண்ணை பதிவு செய்து கொள்ளவேண்டும்.
மேலும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் ஆதார் எண்ணை  அருகில் உள்ள வங்கிகளில் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம். நியாய விலைக் கடைகளில்  அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் விவரம் குறித்து குறுஞ்செய்தி வரப் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் , தங்களது செல்லிடப்பேசி எண்ணை நியாய விலைக் கடையில் உள்ள பிஓஎஸ் இயந்திரத்தில் சரிபார்த்துக் கொள்ளவும். தவறான செல்லிடப்பேசி எண் பதிவாகி இருந்தால் அதைத் திருத்தி மறுபதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com