கொடமாண்டப்பட்டி ஏரிக்கு கால்வாயை நீட்டிப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை

பாளேத்தோட்டம் ஏரியில் இருந்து கொடமாண்டப்பட்டி ஏரிக்கு கால்வாயை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாளேத்தோட்டம் ஏரியில் இருந்து கொடமாண்டப்பட்டி ஏரிக்கு கால்வாயை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் ஏரியில் இருந்து கொடமாண்டப்பட்டி ஏரிக்கு கால்வாயை நீட்டித்து தண்ணீர் கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மத்தூர் ஒன்றியச் செயலாளர் ரவீந்தராசு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் ஏரியில் இருந்து பாளேத் தோட்டம் ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த ஏரியில் இருந்து மத்தூர் ஒன்றியத்தில் உள்ள கொடமாண்டப்பட்டி ஏரிக்கு கால்வாயை நீட்டித்து, தண்ணீர் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் ஒட்டப்பட்டி, கொடமாண்டப்பட்டி, அந்தேரிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும். மேலும், சுற்றுவட்டாரங்களில் 100 - க்கும் மேற்பட்ட கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எனவே, எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com