கிருஷ்ணகிரி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்கள் உக்கத்தொகை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-2019-ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பயிலும் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்க ரூ.10 ஆயிரம், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.  1.7.2017 முதல் 30.6.2018 வரையிலான காலக்கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.
குழுப் போட்டிகளாயின், முதல் இரண்டு இடங்களையும், தனி நபர் போட்டிகளாயின் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேதிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்ட போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைமை அலுவலக தொலைபேசி எண் 044-28364322-இல் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT