சத்ரபதி சிவாஜி ஜயந்தி ஊர்வலம்

தேன்கனிக்கோட்டையில் அனைத்து இந்து இயக்கங்கள் மற்றும் பா.ஜ.க. சார்பில் சத்ரபதி சிவாஜி ஜயந்தி ரத ஊர்வலம்செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டையில் அனைத்து இந்து இயக்கங்கள் மற்றும் பா.ஜ.க. சார்பில் சத்ரபதி சிவாஜி ஜயந்தி ரத ஊர்வலம்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் நாராயணன், நகரத் தலைவர் பார்த்திபன், பா.ஜ.க. மாநிலச் செயலாளர் நாகராஜ், நகரச் பொதுச் செயலாளர்கள் வெங்கட்ராஜ்,  சீனிவாசன், இளைஞரணி பிரபு இந்துமுன்னணி ஒன்றியச் செயலாளர் கார்த்திக், நகரத் தலைவர் ஹரிஷ், வி.எச்.பி. கிருஷ்ணா, கணினிப் பிரிவு பொன்ராஜ், பா.ஜ.க. அமைப்புசாரா அணி மாவட்டச் செயலாளர் பிரகாஷ், நகரச் செயலாளர்கள் சந்தோஷ், விஜயகுமார், நகர இளைஞரணித் தலைவர் கோபி, விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவர் ரங்கநாத், சுப்பிரமணி, பிரவீன் மற்றும் இந்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சத்ரபதி சிவாஜி ஊர்வலம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com