கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை

தமிழகத்தில் முதன் முறையாக நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் முதன் முறையாக நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியை  அடுத்த சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (56).  இவர், கால் குடைச்சல், இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை எலும்பு முறிவு மற்றும் தண்டுவட அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் தனசேகரன் பரிசோதித்தார். அதில் அவரது முதுகுத் தண்டு வடத்தில் ஜவ்வு பகுதி பிதுங்கி,  2 கால்களின் நரம்புப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டதால் வலியால் அவதிப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எம்.ஆர்.ஐ. பரிசோதனை செய்ததில் இந்தப் பிரச்னை உறுதி செய்யப்பட்டு அவருக்கு நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது. 
இதுகுறித்து,  நலப் பணிகள் இணை இயக்குநர் அசோக்குமார், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது: இம் மருத்துவமனை கண்காணிப்பாளர் பரமசிவம், மயக்கவியல் நிபுணர் பிச்சை திருமலை,  எலும்பு முறிவு தண்டுவட அறுவைச் சிகிச்சை நிபுணர் தனசேகரன் ஆகியோர் அந்த பெண்ணுக்கு நவீன சிகிச்சை மூலம் அதாவது,  தழும்பு, ரத்தப் போக்கு இல்லாமல் குறுகிய காலத்தில் அறுவைச் சிகிச்சை செய்து வீட்டுக்குச் செல்லும் வகையில், தையல் இல்லாத நுண்துளை அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பகுதி மயக்க நிலையில், அந்த பெண்ணின் முதுகுவடத் தண்டில் நுண்துளையிட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, அந்த பெண், முழு உடல் திறனோடு உள்ளார். 
தமிழக அரசு மருத்துவமனையில் இந்த வகையான நவீன அறுவைச் சிகிச்சை, முதன் முறையாக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் இத்தகைய சிகிச்சைக்காக ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆனால், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் இலவசமாகப் பெறலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com