போச்சம்பள்ளியில் காவலர் தற்கொலை முயற்சி

போச்சம்பள்ளியில் இயங்கி வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஏழாம் அணியில் பணியாற்றும் இரண்டாம் நிலை

போச்சம்பள்ளியில் இயங்கி வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஏழாம் அணியில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து மத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே சமத்துவபுரம் கிராமத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஏழாம் அணி பயிற்சி மையம் இயங்கி வருகிறது. 
ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பயிற்சி பெற்று வரும் இந்தப் பயிற்சி மையத்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் ராமகிருஷ்ணன் (32) என்பவர் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினார். இவர் விபத்து காப்பீடு கேட்டு அவரது துறையில் விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை விபத்து காப்பீடு குறித்து தகவல் பெற சென்னை சென்று மீண்டும் புதன்கிழமை காலை போச்சம்பள்ளி காவலர்கள் குடியிருப்புக்கு வந்தார்.
பின்னர் அவரது ஓய்வு அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால் சந்தேகித்த அவர்களது நண்பர்கள் கதவைத் தட்டியும் எழவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராமகிருஷ்ணன் இடது கை நரம்புகளை அறுத்து தற்கொலைக்கு முயன்று ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஏழாம் அணியின் தளவாய், ரவிச்சந்திரன் கூறியதாவது:
விபத்தில் சிக்கிய ராமகிருஷ்ணன் கோமா நிலையில் இருந்து மீண்டு வந்தார். அவருக்கு எந்தவித பணி சுமைகளும் அளிக்கப்படவில்லை. மேலும் அவரது சிகிச்சைகாக ஏற்பட்ட விபத்து காப்பீட்டு தொகை எங்கள் பரிந்துரையாக ரூ. 2 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வழங்க கமிட்டிக்குப் பரிந்துரை செய்துள்ளேன். மேலும் சென்னையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காவல் தலைமை அலுவலகத்தில் கமிட்டி நடைபெறும். அங்கு நீயே சென்று பார்த்துவிட்டு வா என்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தேன். அங்கிருந்து புதன்கிழமை வந்த அவர், பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com