கிருஷ்ணகிரியில் பார்வையற்றோர் பிரெய்லி முறையில் வாக்களிக்க விழிப்புணர்வு

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் தலைமையில், பிரெய்லி முறையில் வாக்களிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் 17 ஆயிரம் பேர் உள்ளனர். இவற்றில் 2,800 பேர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பார்வையற்றோர் எளிதாக வாக்களிக்கும் வகையில், பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அவர்களுக்கு பிரெய்லி எழுத்து மூலம் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. வேட்பாளர்களின் பெயர், குறியீட்டுடன் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வலது பக்கத்தில் பிரெய்லி எழுத்து வடிவில் அச்சிடப்பட்ட சீட்டு இருக்கும். எனவே, பார்வையற்றோர் எளிதாக வாக்களிக்க இயலும். ஆகவே, மாற்றுத் திறனாளிகள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றார். 
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பிரியாராஜ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் பார்வையற்றோர் பங்கேற்றனர். மேலும், தேர்தலில் வாக்களிப்பது குறித்து உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com