கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அ.செல்லகுமார் போட்டி

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அ.செல்லகுமார் (57) போட்டியிடுகிறார். மருத்துவரான


கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அ.செல்லகுமார் (57) போட்டியிடுகிறார். மருத்துவரான அ.செல்லகுமார் சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளராக உள்ளார். 1991-இல் சென்னை அண்ணா நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தனித்து போட்டியிட்ட இவர் 38,855 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். தற்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com