விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்புப் பயிற்சி

மல்லசமுத்திரம் வட்டார வேளாண் துறையின் கீழ் அட்மா திட்டத்தின் கீழ் பிள்ளாநத்தம் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும்போது கவனிக்க வேண்டிய முறைகள் பற்றிய பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தலைமை வகித்தார். பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டால் பயிர் பாதுகாப்பு செய்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது பின்பற்றக்கூடிய வழிமுறைகள் பற்றி விளக்கிக் கூறினார். இப் பயிற்சியில் பங்கேற்ற பேயர் மருந்து நிறுவன மேலாளர் அறிவுச்செல்வன் மருந்து தெளிக்கும்போது கவச உடை, கையுறைகள், தொப்பி போன்றவை அணிய வேண்டும் எனவும், மருந்து தெளிக்கும்போது கைகளில் நகம் இருக்கக் கூடாது எனவும், மருந்து தெளித்தவுடன் காலி டப்பாக்களை வெளியில் எரியக் கூடாது எனவும், காலி டப்பாக்களை உடைத்து குழிகள்தோன்றி புதைக்க வேண்டும் எனவும் விளக்கிக் கூறினார்.மருந்துகள் வீரியத் தன்மைக்கு ஏற்ப பச்சை நிறம், மஞ்சள், சிவப்பு என முக்கோண வடிவம் பூச்சி மருந்து அட்டைகளில் இருக்கும், இதில் சிவப்பு நிற முக்கோண வடிவம் கொண்ட பூச்சி மருந்துகளை மிகவும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும் என மேலும் கூறினார். பயிற்சியின் முடிவில் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் கலையரசி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மைதிலி சரண்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். 

மல்லசமுத்திரம் வட்டார வேளாண் துறையின் கீழ் அட்மா திட்டத்தின் கீழ் பிள்ளாநத்தம் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும்போது கவனிக்க வேண்டிய முறைகள் பற்றிய பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தலைமை வகித்தார். பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டால் பயிர் பாதுகாப்பு செய்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது பின்பற்றக்கூடிய வழிமுறைகள் பற்றி விளக்கிக் கூறினார். இப் பயிற்சியில் பங்கேற்ற பேயர் மருந்து நிறுவன மேலாளர் அறிவுச்செல்வன் மருந்து தெளிக்கும்போது கவச உடை, கையுறைகள், தொப்பி போன்றவை அணிய வேண்டும் எனவும், மருந்து தெளிக்கும்போது கைகளில் நகம் இருக்கக் கூடாது எனவும், மருந்து தெளித்தவுடன் காலி டப்பாக்களை வெளியில் எரியக் கூடாது எனவும், காலி டப்பாக்களை உடைத்து குழிகள்தோன்றி புதைக்க வேண்டும் எனவும் விளக்கிக் கூறினார்.
மருந்துகள் வீரியத் தன்மைக்கு ஏற்ப பச்சை நிறம், மஞ்சள், சிவப்பு என முக்கோண வடிவம் பூச்சி மருந்து அட்டைகளில் இருக்கும், இதில் சிவப்பு நிற முக்கோண வடிவம் கொண்ட பூச்சி மருந்துகளை மிகவும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும் என மேலும் கூறினார். பயிற்சியின் முடிவில் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் கலையரசி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மைதிலி சரண்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com