ஜவாஹர்லால் நேரு பிறந்த தினம்

ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் முனியப்பம்பாளையம் காங்கிரஸ் கிராம கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் 

ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் முனியப்பம்பாளையம் காங்கிரஸ் கிராம கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்த தினம் புதன்கிழமை நடைபெற்றது.  இதில் கிராம காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் பி.சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.  முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.சுப்ரமணி வரவேற்றார்.
பின்னர், காங்கிரஸ் கொடியேற்று விழா ஜவாஹர்லால் நேரு திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பின்னர் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில்  வழங்கப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி டாக்டர் ஆர்.செழியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு நோட்டு, பேனா, முதியோர்களுக்கு வேட்டி சேலை  வழங்கினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் எஸ்.தாஜ் முகமது, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜ்குமார்,  முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்
பி.வி.செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com