திருச்செங்கோட்டில் ரூ.400 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

ரூ.400 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை திருச்செங்கோட்டில் முதல்வர் எடப்பாடி

ரூ.400 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை திருச்செங்கோட்டில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். 
திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 669 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் ஆலாம்பாளையம், படவீடு பேரூராட்சிகள்,  சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிப் பகுதிகள் பயன்பெறும் வகையில் ரூ.399.46 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ.87.21 கோடிம் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.  இதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 
விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர். 
இதேபோல் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் ரூ.7.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை வரும் 18 ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்.  மேலும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com