கோயில் திருவிழாவை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்தபடி கோயில் திருவிழாவை அமைதியாக நடத்த உரிய நடவடிக்கை

முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்தபடி கோயில் திருவிழாவை அமைதியாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல் துறைக்குக் கோரிக்கை விடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டிபுதூரில் ஆயா கோயில் எனும் அழியா இலங்கை அம்மன் கோயில் திருவிழாவை அமைதியான முறையில் நடத்தி கொடுக்க வலியுறுத்தி, அப் பகுதி பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசுவிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனு விவரம்: அழியா இலங்கை அம்மன் கோயில் திருவிழா கடந்த 12-ஆம்  தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியபோது ஒரு பிரிவினர் தங்களைப் பூச்சாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்காமல் தடுத்தனர். இதையடுத்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் திருவிழாவை இந்து சமய அறநிலைய துறையே நடத்திட வேண்டும்.
தனி நபர்கள் யாருக்கும் முன்னுரிமை அளிக்கக் கூடாது. விழாவில் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை நடத்தக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.
இந் நிலையில் ஒரு பிரிவினர் அமைதி பேச்சுவார்த்தையை மீறும் வகையில் கலை நிகழ்ச்சிகளையும், வாண வேடிக்கைகளையும் நடத்த முயற்சி செய்து வருகின்றனர்.   எனவே இந்த செயல்களை தடுத்து கோயில் திருவிழாவை அமைதியாக நடத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com