"இயற்கை, யோகா மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு தேவையில்லை'

இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு தேவையில்லை என்று எக்ஸல் இயற்கை,  யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் கவிதா தெரிவித்தார்.

இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு தேவையில்லை என்று எக்ஸல் இயற்கை,  யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் கவிதா தெரிவித்தார்.
குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் கல்லூரி நிறுவன வளாகத்தில் உள்ள எக்ஸல் இயற்கை,  யோகா மருத்துவக் கல்லூரியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.  இதில், கவிதா பேசியது:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள எக்ஸல் இயற்கை, யோகா  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உலக தரத்துக்கு இணையான மருந்துவ வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், 100 படுக்கை கொண்ட உள்,  புற நோயாளிகள் பிரிவு சிறப்பாக செயல்படுகிறது.
கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி, ரத்த அழுத்தம், மூட்டு வலி, பக்கவாதம், உடல் பருமன், சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, மாதவிடாய் கோளாறுகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு இயற்கை முறையிலான சிகிச்சைகள் சிறப்புடன் வழங்கப்படுகிறது. மருத்துவமனையின் சிறப்பு அம்சமாக உணவு சிகிச்சை, யோகா சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, நிற சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்குபஞ்சர் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை போன்றவை சிறந்த மருத்துவர்களைக் கொண்டு வழங்கப்படுகிறது. 
நிகழாண்டில் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை கல்லூரியில் நேரடியாகவும், தமிழக அரசின் இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு மூலமாகவும் நடைபெற்று வருகிறது. இந்தப் படிப்பில் சேர தேசிய தகுதித்தேர்வு(நீட்) தேவையில்லை என்றார். 
விழாவுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே. நடேசன் தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் என்.மதன் கார்த்திக் முன்னிலை வகித்தார்.  நிர்வாக இயக்குநர் சண்முகநாதன்,பார்மஸி கல்லூரி முதல்வர் மணிவண்ணன்,பிசியோதெரபி கல்லூரி முதல்வர் ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com