நவ. 22-இல் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

நாமக்கல்லில் வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

நாமக்கல்லில் வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் காலை 8.30 மணியளவில் நடத்தப்பட உள்ளது. போட்டி ஆண், பெண் இரு பாலருக்கும் நடத்தப்பட உள்ளது.
தடகளம் (ஆண்களுக்கான போட்டி): 100 மீ, 200 மீ,  800 மீ, 1,500 மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், தொடர் ஓட்டம் நடத்தப்படுகின்றன.
தடகளம் (பெண்களுக்கான போட்டி) : 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், தொடர் ஓட்டம் நடத்தப்படுகின்றன. தடகளம் போட்டிகள் 22-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
கபாடி, வாலிபால் இருபாலருக்கும் நடத்தப்படுகின்றன. கால்பந்து  ஆண்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. கூடைப்பந்து போட்டிகள் இருபாலருக்கும் நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், டென்னிஸ், இறகு பந்து போட்டிகள்  இருபாலருக்கும்  நாமக்கல் ஆபிசர்ஸ் கிளப்பிலும், டேபிள் டென்னிஸ் போட்டி இருபாலருக்கும் விக்டோரியா ஹால் நாமக்கல்லிலும் நடைபெறுகின்றன.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு  தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாநில அரசின் அனைத்துத் துறையிலும் பணிபுரியும் ஊழியர்கள் அனைத்து அலுவலர்களும் இப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
காவல் துறையில் அமைச்சுப் பணியாளராகப் பணிபுரியும் பணியாளர்கள் இப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அரசுப் பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் இப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
நிதி உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள்,  சீருடைப் பணியாளர்கள்,  தற்காலிக, தினக்கூலி பணியாளர்கள்,  6 மாதத்துக்குள் அரசுப் பணியில் சேர்ந்த பணியாளர்கள் இப் போட்டியில் பங்குபெற அனுமதியில்லை.
தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அல்லது ஒப்பந்தப் பணியாளர்கள் இப் போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. அரசுப் பணியாளர்கள், அடையாள அட்டையை கண்டிப்பாகக் கொண்டு வர  வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com