நாமக்கல்

மாவட்ட அளவிலான தடகளப் போட்டி: காமராஜர் பள்ளி மாணவி சாம்பியன்

DIN

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் நாமக்கல் காமராஜர் பள்ளி மாணவி தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பள்ளி விளையாட்டு மேம்பாட்டு(எஸ்.எஸ்.பி.எப்) அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவிலான 14 மற்றும் 16 வயதுக்குள்பட்டோருக்கான  தடகள விளையாட்டுப் போட்டிகள் காமராஜர் கல்வி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.  இதில் 15 பள்ளிகளைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 
இந்த விளையாட்டுகளை காமராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவரும் எஸ்.எஸ்.பி.எப் நாமக்கல் மாவட்டத் தலைவருமான ஆர்.நல்லதம்பி தலைமை வகித்து,  ஒலிம்பிக் சுடரை ஏற்றி துவக்கிவைத்தார்.  கல்வி நிறுவனத்தின் செயலர் சதாசிவம் பேசினார் .  எஸ்.எஸ்.பி.எப் மாவட்டச்ச செயலர் ஆர்.வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். 
இதில் தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை காமராஜர் மெட்ரிக்.  பள்ளி மாணவி கே.கெளசிகா பெற்று சாதனை படைத்தார்.  முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த வீராங்கனைகள் மாநில அளவில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தேசிய தடகள வீரரும், தமிழ்நாடு எஸ்.எஸ்.பி.எப் செயலருமான என். அண்ணாவி,  நாமக்கல் மாவட்ட சேர்மன் சு.ரவி,  மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.அருண்குமார், ஜி.வெற்றிச்செல்வன்,  சி.ஜெ.பிரபு,  மாவட்ட உடற்கல்வி அலுவலர் பெரிய கருப்பன் ஆகியோர்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினர். 
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தேசிய அளவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற சாய்வாங்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற காமராஜர் பள்ளி மாணவர் என்.டி.பரத்,  வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி ஆர்.காவ்யா ஆகியோருக்கு அரசு வழங்கிய ஊக்கத்தொகை ரூ.1,50,000 மற்றும் ரூ.1,00,000-க்கான காசோலையை பள்ளித் தலைவர் வழங்கினார்.  
ஏற்பாடுகளை எஸ்.எஸ்.பி.எப் துணைச்செயலர்கள் கே.மாயக்கண்ணன், ஆர்.கார்த்திக்,  உடற்கல்வி இயக்குநர்கள் எஸ்.யுவராஜ், ஜி.கமலஹாசன் ஆகியோர் செய்திருந்தனர்.  எஸ்.எஸ்.பி.எப்.பொருளாளர்
எ.கார்த்திக் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT