ஐடிஐ படிப்பவர்களுக்கு பயிற்சி: நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு ஐடிஐகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஐடிஐகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை
எடுத்துள்ளது.
இப்பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் 10,000 பேருக்கு அளிக்கப்படும். பயிற்சி காலம் 3 மாதங்கள். ஒரு பயிற்சியாளருக்கு பயிற்சி அளிக்க தினமும் ரூ.38 வீதம் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். இது தொடர்பான விவரங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, வரும் 30-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு, ஜி.இஸ்மத்பானு, மாவட்ட உதவி இயக்குநர் (பொ), மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்,  நாமக்கல் என்ற முகவரியில் நேரில் அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com