நாமக்கல்

கொல்லிமலையில் பன்றி வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.36 லட்சம் ஒதுக்கீடு

DIN

கொல்லிமலையில் பன்றி வளர்ப்பை ஊக்குவிக்க, ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புது தில்லியில் உள்ள உயிர்தொழில்நுட்பவியல் துறையின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பன்றி வளர்ப்பு திட்டத்தின் மூலம், கொல்லிமலையில் மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் என்ற திட்டத்துக்கு ரூ.36 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த ஒருங்கிணைந்த பன்றி வளர்ப்பு திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டத்தின் புத்தாக்கப் பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கும் விழா கொல்லிமலையில் உள்ள பெரியகோவிலூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ப.மோகன் விழாவுக்கு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு பன்றிக் குட்டிகள் மற்றும் இடுபொருள்களை வழங்கி பேசினார். பயனாளிகள் வருமானத்தை அதிகரிக்க இனப்பெருக்கத்துக்கு பன்றிக் குட்டிகளை வளர்க்கவும், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்போடு பன்றிக் குட்டிகள் வளர்ப்பினையும் இணைந்து செயல்படுத்தினால் அதிக லாபம் ஈட்டலாம் எனவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் வீ.ரமேஷ் பேசுகையில், வேலைவாய்ப்புகளை உருவாக்க பன்றி வளர்ப்பு தொழில் முக்கிய வழிவகுக்கும் என தெரிவித்தார். 
நாமக்கல் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் வி.பி.பொன்னுவேல் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பேசினர். மேலும் பயனாளிகளுக்கு மதிப்புக் கூட்டிய பன்றி இறைச்சி உற்பத்தி குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT