செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினருக்கு திமுக நிதி உதவி

By  நாமக்கல்| DIN | Published: 11th September 2018 09:35 AM

கருணாநிதி காலமான செய்தி கேட்டு இறந்த இரு திமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு அக்கட்சி சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.
 திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி இறந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் துத்திக்குளத்தைச் சேர்ந்த மணிமாறன், நாமக்கல் ஒன்றியம் கீரம்பூர் ஆண்டிப்பட்டிபுதூரைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் அதிர்ச்சியில் இறந்தனர்.
 இதையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு திமுக சார்பில் மாவட்டப் பொறுப்பாளர் எஸ். காந்திச்செல்வன் நேரில் சென்று ஆறுதல் கூறி தலாரூ. 1 லட்சம் வரைவோலையை வழங்கினார். ஒன்றியச் செயலாளர்கள் அசோக்குமார், பழனிவேல், மாவட்ட, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

More from the section

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை மாற்றித் தரக் கோரிக்கை
கோழிகளைக் கூண்டில் வளர்க்கத் தடை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரிக்கை
பழங்குடியினருக்கு பட்டா வழங்க தாமதம்: தேசியக் கட்சிகள் மீது குற்றச்சாட்டு
கொல்லிமலையில் நாளை திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம்
நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் திருவிழா தொடக்கம்