திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

குடிநீர் சீராக விநியோகிக்கக் கோரிக்கை

By  நாமக்கல்,| DIN | Published: 11th September 2018 09:34 AM

சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே கோணங்கிப்பட்டி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: கோணங்கிப்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்குக் கடந்த 2 மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைக்க எடுத்து வந்துள்ளோம். இனியாவது எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

More from the section

மணியங்காளிபட்டியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்


நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கக் கூட்டம்

திருச்செங்கோட்டில் போலி எஸ்.ஐ. கைது
நாம சங்கீர்த்தனம்
கடும் போக்குவரத்து நெரிசல்: கோட்டை சாலை வழியாக வாகனங்கள் இயக்குவதில் திட்டமிடல் அவசியம்