வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த சம்பவம்: பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு

By  நாமக்கல்,| DIN | Published: 11th September 2018 09:38 AM

நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.
 நாமக்கல்-திருச்சி சாலை ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் சரவணன். ரிக்வண்டி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (29). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு அனிஷா (8) என்ற மகளும், தனிஷ் (7) என்ற மகனும் இருந்தனர். தனிஷ் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ஆம் வகுப்புப் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்த சசிகலா உணவில் விஷம் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. உயிருக்குப் போராடிய 3 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் தனிஷ் கடந்த 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
 சசிகலா, அவரது மகள் அனிஷா ஆகியோருக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். சிறுமி அனிஷா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 

More from the section


ஐடிஐ படிப்பவர்களுக்கு பயிற்சி: நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
பிலிக்கல்பாளையம் ஏலச் சந்தையில் வெல்லம் விலை சரிவு


கொல்லிமலையில் பன்றி வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.36 லட்சம் ஒதுக்கீடு

டிச. 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ முடிவு