18 நவம்பர் 2018

கொந்தளம் ஊராட்சியில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்

By  பரமத்திவேலூர்,| DIN | Published: 11th September 2018 09:34 AM

கொந்தளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமில் 300 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
 தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 15-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள் கொந்தளம் ஊராட்சிக்குள்பட்ட கொந்தளம், கொந்தளம் மேட்டூர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றன.
 வெங்கரை கால்நடை மருத்துவர் மணிவேல் மற்றும் ஆவின் கால்நடை மருத்துவர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பசு,எருது மற்றும் 3 மாதங்களுக்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் 181 பசுக்களுக்கும், 110 எருதுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறும் இம் முகாமை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்துக் கொள்ளுமாறு கால்நடை மருத்துவர் மணிவேல் அறிவுறுத்தினார்.
 
 

More from the section


கூட்டுறவு வேளாண் சங்கத்தில் ரூ. 16 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

கஜா புயல் இழப்பீடுகளை அரசு விரைந்து வழங்க வேண்டும்: இ.ஆர்.ஈஸ்வரன்
ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் போட்டிகள்


நம்பிக்கை இல்ல குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கல்

அனுமதியின்றி போராட்டம்: திமுகவினர் கைது