புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

பாவை கல்வி நிறுவனங்களில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

By  ராசிபுரம்,| DIN | Published: 11th September 2018 09:34 AM

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி, பாவை பிஎட்., கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்றவற்றின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
 விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். பிரேம்குமார் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கைநடராஜன் விழாவைக் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்துப் பேசினார்.
 விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன் பேசியதாவது:
 பெண் கல்வியில் முன்னோடியான சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே, வணிகத்தில் முன்னோடியாக திகழ்ந்த ரிச்சர்ட் பிரான்சன் போன்ற எண்ணற்ற சாதனையாளர்களைப் போன்று நீங்களும் சமுதாயத்திற்கு முன்னோடியாக திகழ வேண்டும் என்றார். பின்னர் மாணவ மாணவியர் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர்.
 புத்தாக்கப் பயிற்சி: இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில், மாணவர்களுக்கான இலக்கு, ஆளுமை திறன், தலைமை பண்பு, சமுதாயத்தின் வாய்ப்புகள், பிரச்சனைகளை கையாளுதல், தன்னம்பிக்கை வளர்ப்பு போன்றவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டன.
 விழாவில், பாவை காலேஜ் ஆப் டெக்னாலஜியின் முதல்வர் ஜே. சுந்தரராஜன், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் டி.ஆர். மணிசேகரன், செயலாளர் டி.ஆர். பழனிவேல், இணைச் செயலாளர் என். பழனிவேல், இயக்குநர் (சேர்க்கை) கே. செந்தில், இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி) எஸ். சீனிவாசன், பிஎட்., கல்லூரி முதல்வர் எஸ். கோடீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section


இரட்டைக் கொலை வழக்கில் தம்பதிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம்
சேதமடைந்த நிலையில் அரசுப் பள்ளி கட்டடம்: ஆட்சியரிடம் புகார்
எலச்சிபாளையத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பயிற்சி
நாமக்கல்லில் கம்பன் விழா: செப். 29-இல் துவக்கம்