திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

கருணாநிதிக்கு புகழ் வணக்கம் நிகழ்ச்சி

DIN | Published: 12th September 2018 07:54 AM

நாமக்கல்லில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.காந்திசெல்வன் தலைமை வகித்தார். நிகழ்வில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், புலவர் மா.ராமலிங்கம் ஆகியோர் புகழ் வணக்கத்தையும்,  நினைவஞ்சலி உரையையும் நிகழ்த்தினர்.  
நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி,  முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, மாவட்ட அவைத்தலைவர் ரா.உடையவர், துணைச் செயலர்கள் பி.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, விமலா சிவக்குமார், பொருளாளர் கே.செல்வம், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ப.ராணி, சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் ரா.நக்கீரன், ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலர் மு.பரமானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section

கோழிகளைக் கூண்டில் வளர்க்கத் தடை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரிக்கை
பழங்குடியினருக்கு பட்டா வழங்க தாமதம்: தேசியக் கட்சிகள் மீது குற்றச்சாட்டு
அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை மாற்றித் தரக் கோரிக்கை
கொல்லிமலையில் நாளை திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம்
நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் திருவிழா தொடக்கம்