வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்

DIN | Published: 12th September 2018 07:54 AM

நாமக்கல்லில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.
நாமக்கல் சாலை பழைய முன்சீப் அலுவலகம் இருந்த பகுதி மிகவும் அசுத்தமாகவும், மழைநீர் தேங்கி கொசுக்கள்,  விஷ ஜந்துக்கள் புகலிடமாகவும் திகழ்ந்தது. இதனருகே அரசுப்  பள்ளி,  அலுவலகம் செயல்பட்டு வந்ததால்,  மூன்சீப் அலுவலகம் இருந்த பகுதியை சீரமைத்து தருமாறு எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்தம் செய்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நாமக்கல் நகராட்சி ஆணையர் (பொறுப்பு)  கமலநாதன் தலைமை வகித்தார். நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சேகர், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன்,  ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை  நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர்  பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.  விழாவில் நகர்மன்ற முன்னாள்  உறுப்பினர் சாதிக் பாஷா,  சிறுபான்மையினர் பிரிவின் மாவட்ட இணைச் செயலர் லியாகத் அலி, நாமக்கல் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் துணைத் தலைவர் சண்முகம், நகரத் துணைச் செயலர்கள் நரசிம்மன், சன்பாலு, சிறுபான்மையினர் பிரிவின் நகரச் செயலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section

நவம்பர் 14 மின் தடை
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கற்றல் அடைவுத் திறன் குறித்த கூட்டம்
கஜா புயல்: கோழிப்பண்ணை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
பஸ் வசதி இல்லை பல கி.மீ. தூரம்  நடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்