திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

"நல்லதொரு வாழ்க்கைக்கு ஒழுக்கம் இன்றியமையாதது'

DIN | Published: 12th September 2018 07:56 AM

நல்லதொரு வாழ்க்கைக்கு ஒழுக்கம் இன்றியமையாதது என்று இங்கிலாந்து நாட்டின் தென்னிந்திய தூதரக அதிகாரி பரத்ஜோன்சி கூறினார்.
பரமத்தி அருகேயுள்ள பி.ஜி.பி. கல்வி குழுமத்தில் பட்டமளிப்பு விழா, கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றன. விழாவில் பட்டங்களை வழங்கி  பரத்ஜோன்சி பேசியது:-
இந்திய நாட்டுக்காகச் சேவை செய்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.  மாணவ, மாணவியர்கள் எதிலும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாகவும், கலாசாரம் மேம்படுத்துவதில் மாணவ,மணவியர்களின் பங்களிப்பு
முக்கியமானதாகும்.
எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைவிட எங்கே செல்கிறீர்கள் என்பது முக்கியம். நல்ல ஒழுக்கமானது நல்லதொரு வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்றார்.
பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் குழந்தைவேலு,  பி.ஜி.பி. கல்லூரியின் தாளாளர் கணபதி,  தலைவர் பெரியசாமி,  கல்லூரி முதன்மையர் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

More from the section

தலைமலைக்கு சிறப்புப் பேருந்து: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
அரசுப் பள்ளிக்கு தொலைக்காட்சிப் பெட்டி அளிப்புகு
இந்திய கம்யூ. பிரசாரக் குழுக்கு நாமக்கல்லில் வரவேற்பு
எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலுக்கு சாலை வசதி செய்து தரக் கோரிக்கை