செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஒத்திவைப்பு

DIN | Published: 12th September 2018 07:53 AM

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு வரும் 23-இல் நடைபெற இருந்த நிர்வாகிகள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
தேர்தலில் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி தலைமையிலான நிர்வாகிகள் 5 பேரும் ஒரே அணியாகவும், முன்னாள் தலைவர் கே.நல்லதம்பி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட முடிவு செய்து சங்க உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர். 
இந்த நிலையில் தேர்தல்குழு தலைவர் பொன்னம்பலம் தலைமையில் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில், முன்னாள் தலைவர் நல்லதம்பி, தன்னை சங்கத்தில் இருந்து நீக்கியதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பெற்று அந்த உத்தரவை தேர்தல் குழுவுக்கு அனுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்து சங்கம் சார்பில் மற்றொரு விளக்கக் கடிதம்
தேர்தல் குழுவுக்கு
அனுப்பப்பட்டிருந்தது. 
இந்த இரண்டு கடிதங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, வரும் 23ஆம் தேதி நடைபெற்ற இருந்த சங்க நிர்வாகிகள் தேர்தலை ஒத்திவைப்பதும் என்றும் நீதிமன்ற வழக்குகள் முடிந்த பின்னர் தேர்தல் நடத்துவதும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தேர்தல் குழு உறுப்பினர்களான தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலர் கார்த்திக், பொருளாளர் கணபதி, துணைத் தலைவர் தங்கவேல்,  துணைத் தலைவர் செந்தில், ஆட்டோநகர் சங்கத்தலைவர் பழனிசாமி, ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் பெரியசாமி, காளிமுத்து, ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

More from the section

மணியங்காளிபட்டியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்


நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கக் கூட்டம்

திருச்செங்கோட்டில் போலி எஸ்.ஐ. கைது
நாம சங்கீர்த்தனம்
கடும் போக்குவரத்து நெரிசல்: கோட்டை சாலை வழியாக வாகனங்கள் இயக்குவதில் திட்டமிடல் அவசியம்