பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
 விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி. நடராஜன் தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் பாஜில் வரவேற்றார். பயிற்சியாளர்களாக பாவை கல்வி நிறுவனங்களின் முதன்மையர் ஆர். கஸ்தூரிபாய், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் துணை வேலைவாய்ப்பு அலுவலர் மஹாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றி பயிற்சியைத் துவக்கி வைத்தார். விழாவில், ஆடிட்டர் என்.வி.நடராஜன் பேசியது:
 பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களாகிய உங்களுக்கு உயர்ந்த லட்சியங்கள், கனவுகள் போன்றவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, அதற்கு தேவையான தகவல்கள், வாய்ப்புகளை திறம்பட கண்டறிவதற்கு வழிகாட்டியாக இந்தப் பயிலரங்கு இருக்கும். நீங்கள் அனைவரும் சமுதாயத்தினை கட்டமைக்கும் பெருந்தலைவர்களாக உருவாக வேண்டும் என்றார்.
 இப் பயிற்சி வகுப்பில் நட்பு, சொந்தம், பக்திஆகியவற்றை எவ்வாறு கையாளுதல், சரியான தொழில் முன்னேற்றப் பாதையை தேர்வு செய்தல், இலக்குகளை நிர்ணயித்தல் போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
 பயிற்சியில் மாணவ, மாணவியர் சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொண்டனர். விழாவில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் சி.சதீஸ், துணை முதல்வர் ரோஹித், கல்வி நிறுவனங்களின் முதன்மையர் (கல்வி) கே.செல்வி, கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் இ.ஜே.கவிதா, எ.நிரஞ்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com