நாமக்கல்

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினமணி

நாமகிரிப்பேட்டை ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் இ.குப்பண்ணன் முன்னிலை வகித்தார். கிராமப் புறங்களில் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். ராசிபுரம் வட்டத்தில் ஏரி, குளங்கள், நீரோடைகள் தூர்வார 100 நாள் வேலை திட்டத்தின் அனைத்து தொழிலாளர்களையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருள்களையும் முழுமையாக வழங்க வேண்டும். தனிநபர் கழிப்பிடம் கட்டியதற்கான கட்டட நிதியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
 இதில் திரளான பெண்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமெழுப்பினர். அதனைத் தொடர்ந்து, வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT