சக்தி அறக்கட்டளை மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு

நாமக்கல் மாவட்டத்தில் சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நாமக்கலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நாமக்கலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை நிறுவனர் மற்றும் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு துணைத் தலைவர், பாஜக ஊடக பிரிவு சென்னை கோட்ட பொறுப்பாளர் என்.கே.எஸ். சக்திவேல் தலைமை வகித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...
அடுத்த ஒரு ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவது, ஆண்டுதோறும் 25 ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது. 
கூட்டத்தில் அறக்கட்டளை நிர்வாகி விஜயகுமாரி, ஒருங்கிணைப்பாளர்கள் பரமேஸ்வரி, ராஜு, ஜோதிமணி, சுசீலா, ராஜேஸ்வரி, ராணி, ராதா, தனலட்சுமி, சந்திரமோகன், கேசவன், லட்சுமி, சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com