"விவசாயிகள் இரட்டிப்பு லாபம் பெற உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்குங்கள்'

விவசாயிகளின் தற்போது நிலைமாறி இரட்டிப்பு லாபம் பெற விவசாயிகள் ஒருங்கிணைந்து உழவர் உற்பத்தியாளர்

விவசாயிகளின் தற்போது நிலைமாறி இரட்டிப்பு லாபம் பெற விவசாயிகள் ஒருங்கிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க வேண்டும் என நவணி கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது.
புதுச்சத்திரம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் நவணி கிராமத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
பயிற்சிக்கு புதுச்சத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ. பேபிகலா தலைமை வகித்துப் பேசியதாவது: விவசாயத்தில் தற்போது உள்ள நிலையை மாற்ற வேண்டுமானால் விவசாயிகள் வியாபாரிகளாக மாறினால்தான் சாத்தியமாகும்.
விவசாயிகள் குழுவாக இணைந்து செயல்பட்டால் தங்களுக்கு வேண்டிய இடுபொருள்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யலாம். அதன்மூலம் குறைவான விலைக்கு இடுபொருள்களை வாங்கிச் செலவைக் குறைக்கலாம். விவசாயப் பணிகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி துரிதமாக செய்து முடிக்கலாம். விளைவிக்கப்பட்ட விளைபொருள்களைக் கூட்டாக சேர்ந்து விற்பனை செய்யும்போது இடைத்தரகர்களை தவிர்த்து அதிக விலைக்கு விற்பனை செய்து பயன் அடையலாம். விளைபொருள்களை எந்தச் சந்தையில் விலை கூடுதலாகக் கிடைக்கிறது என்பதை வேளாண்மைத் துறையின் இணையதளம் மூலம் தெரிந்து அங்கு சென்று குழுவாக விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டலாம். மேலும் விளைவித்த விளைபொருள்களை அப்படியே விற்காமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால் வருமானம் இரட்டிப்பாகிறது.  அதனால், விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்து விவசாயிகள் வியாபாரியாக மாறவேண்டும். அப்போது விவசாயிகளின் வருமானம் உயர்ந்து வாழ்க்கை தரம் உயரும் என்றார். 
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com