செங்குந்தர் தொழில்நுட்பக் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

செங்குந்தர் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்முனைவோர் சங்கம்,  இந்திய தொழில் முனைவோர் நிறுவனம்

செங்குந்தர் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்முனைவோர் சங்கம்,  இந்திய தொழில் முனைவோர் நிறுவனம் ஆகியவை இணைந்து தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை மூன்று நாள்கள் நடத்தியது.
முகாமின் தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை கல்லூரியின் செயலாளர் பேராசிரியர் பாலதண்டபாணி தலைமையில் முகாம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சதிஷ்குமார் வரவேற்றார். கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலர் இன்ஜினியர் மதன், வேலைவாய்ப்பு இயக்குநர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்தினர். சிறப்பு அழைப்பாளராக இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் கண்ணன் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், மானியங்கள் உள்ளிட்டவை பற்றி விளக்கினார்.
இரண்டாம் நாள் சிறப்பு அழைப்பாளராக சிறுகுறு தொழில் மேம்பட்டு மைய மாநிலப் பொருளாளரும் ஸ்ரீ கெளரியம்மன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளருமான தியாகராஜன் கலந்து கொண்டார். முகாமின் மூன்றாம் நாள் நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ கெளரியம்மன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com