மக்காளச்சோளப் பயிர் மேலாண்மை பயிற்சி

நாமகிரிப்பேட்டை பகுதியில் மக்காச்சோள பயிரில் அதிகம் ஏற்படும் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நாமகிரிப்பேட்டை பகுதியில் மக்காச்சோள பயிரில் அதிகம் ஏற்படும் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) பெ.மோகன் அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் அதிகம் இருக்கிறது. இளம் புழுப் பருவம் கறுப்புத் தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும், மூன்றாம் பருவத்தில் புழுவின் மேற்பகுதியில் பழுப்பு நிறமாகவும், பக்கவாட்டில் வெள்ளை நிற கோடுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
புழுக்கள் மொத்தம் 6 பருவ நிலைகளைக் கொண்டது. புழுக்கள் 6 பருவ நிலைகளில் தலை செம்பழுப்பு நிறமாகக் காணப்படும். 6-ஆம் நிலையின் புழுவின் தலைப்பகுதியில் வெண்ணிற கோடுகள் தென்படும். அதாவது "ஏ' வடிவக் கோடுகள் தலையில் காணப்படும். புழு பருவம் 14 நாள்கள் கோடைகாலத்திலும், 30 நாள்கள் குளிர்காலங்களிலும் காணப்படுகின்றன.
மேலும் முட்டையிலிருந்து வெளிவரும் இளம்புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் பச்சையத்தை சுரண்டி சேதத்தை ஏற்படுத்தும். இதனால், இலையின் மேற்பரப்பில் கண்ணாடி போன்று வெண்மையாகக் காணப்படும். இலைகளின் ஓரங்களில் வெட்டப்பட்டு கடித்து உண்ணும்.
நடுக்குருத்து பாதிக்கப்படும்போது பக்க கிளைகள் அல்லது பக்கக்குருத்து வளர ஆரம்பிக்கும். இரவு நேரங்களில் அதிகமாக உண்ணும். இப்புழுக்கள் மக்காச்சோளம், சோளம், பயறுவகைகள், பருத்தி, காய்கறி பயிர்கள் போன்ற பலவகையான பயிர்களைத் தாக்கும் குணமுடையது.
இதைக் கட்டுப்படுத்தும் முறைகள்: வயல்களில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைக்கவேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை அழிக்க இயலும். விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளைக் கண்காணிக்க வேண்டும். விதை நேர்த்தி செய்வதால் ஆரம்பக் கட்டத்தில் இளம் பயிர்களைப் பாதுகாக்கலாம்.
எதிர் உயிர் நுண்ணுயிர்களான பிவேரியா பேசியான, மெட்டாரைசியம், அனைசோபியோ, பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் போன்றவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 முதல் 5 கிராம் வரை பயன்படுத்தி பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். என்பிவி வைரஸ் கரைசலைத் தயாரித்து 1 லிட்டர் நீருக்கு 2 ஆடு வீதம் தெளிக்கலாம். கார்டாப் குருணை மருந்து ஹெக்டருக்கு 8 கிலோ மணலுடன் கலந்து குருத்துப் பகுதியில் போடுவதன் மூலம் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com