சனிக்கிழமை 15 டிசம்பர் 2018

நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கக் கூட்டம்

DIN | Published: 24th September 2018 08:32 AM

நாமக்கல் மாவட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்கள் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கப் பொறுப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்கள் அனைத்துச் சங்கங்களின் நிர்வாகிகளின் கருத்துகளை விவாதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வரும் 30-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து அனைத்து விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. 
கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தண்டபாணி, நிர்வாகிகள் மாதேஸ்வரன், ராஜசேகர், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

சவுளுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விபத்தில் சிக்கியவருக்கு அமைச்சர் உதவி
விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்புப் பயிற்சி
சிறப்பு வழக்குரைஞர் நியமனம்: கோகுல்ராஜ் தாயார் ஆட்சியரிடம் மனு
அசோலா வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்