சனிக்கிழமை 15 டிசம்பர் 2018

நாம சங்கீர்த்தனம்

DIN | Published: 24th September 2018 08:31 AM

ஜேசிஐ திருச்செங்கோடு டெம்பிள் கிளை சங்கத்தின் சார்பில், நாம சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ பாண்டுரங்கர், ருக்மணி தாயார் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றன.
ஸ்ரீ விட்டல்தாஸ் மகாராஜ் தலைமையில் நடைபெற்ற நாம சங்கீர்த்தன பக்தி பஜனை நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை வேலுச்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  ஸ்ரீ பாண்டுரங்கர், ஸ்ரீ ருக்மணி தேவி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வந்த பட்டாச்சாரியார்கள் நடத்தினர். மேளதாளம் முழங்க சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். பக்தர்கள் சீர்வரிசைகள் கொண்டு வந்து திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

More from the section

சவுளுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விபத்தில் சிக்கியவருக்கு அமைச்சர் உதவி
விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்புப் பயிற்சி
சிறப்பு வழக்குரைஞர் நியமனம்: கோகுல்ராஜ் தாயார் ஆட்சியரிடம் மனு
அசோலா வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்