பாவை பொறியியல் கல்லூரியில் வேளாண் மன்றத் துவக்க விழா

பாவை பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் மன்றத் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாவை பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் மன்றத் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி. நடராஜன் தலைமை வகித்தார்.  வேளாண் பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவர் அ. அஜித்குமார் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றினார். விழாவில் நாகப்பட்டினம் பாரம்பரிய வேளாண் விஞ்ஞானி ஆலங்குடி பெருமாள், பயிற்சியாளர் ஸ்ரீராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் நிகழ்ச்சியில் பேசினார். சிறப்பு விருந்தினர் பாரம்பரிய வேளாண் விஞ்ஞானி ஆலங்குடி பெருமாள் பேசியது:
ஒற்றை நாட்டு நடவு முறையில் இயற்கை விவசாயம் பெருமளவில் செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி, விவசாயத்தினை மீட்டெடுக்க வேளாண் மாணவர்கள் முன்வரவேண்டும் என்றார். பயிற்சியாளர் ஸ்ரீராம், இயற்கை விவசாயி அசோகன், கல்லூரி இயக்குநர் கே.கே.ராமசாமி, கல்லூரியின் முதல்வர் எம்.பிரேம்குமார்,  வேளாண் பொறியியல் துறை பேராசிரியர் செ.மயில்சாமி, துறைத் தலைவர் சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com