நாமக்கல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்: சார் ஆட்சியர் ஆய்வு

DIN

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பணிகளை நாமக்கல் சார் ஆட்சியர் சு. கிராந்திகுமார் பதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 1.1.2019ஐ தகுதி நாளாகக் கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தச் சிறப்புச் சுருக்கமுறை திருத்தப் பணிகளின்போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 விண்ணப்பித்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அருகில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் அளிக்கலாம். 
 மேலும் வாக்காளர்களின் தேவைக்கேற்ப பெயர் நீக்கம் செய்வதற்கான படிவம்-7, திருத்தம் செய்வதற்கான படிவம்-8 மற்றும் ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் இடமாற்றம் படிவம் 8ஏ ஆகியவற்றினையும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணியை முன்னிட்டு நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதையொட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி மைய அலுவலர்கள்,  மையங்களில் இருந்து விண்ணப்பங்களைப் பெற உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை நாமக்கல் சார் ஆட்சியர் சு. கிராந்தி குமார் பதி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்ததையும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்துக்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச் சாவடி மையத்துக்கு வந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களை பார்வையிட்டார். தொடர்ந்து சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் அக்டோபர் 7, 14 ஆம் தேதிகளில் நடைபெறும். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாமக்கல் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என சார் ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின்போது நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் சி. செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT