நாமக்கல்

எலச்சிபாளையத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பயிற்சி

தினமணி

திருச்செங்கோடு அருகே புள்ளாகவுண்டம்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்குதல் பற்றிய பயிற்சி விவசாயிகளுக்கு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
 எலச்சிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சத்திய பிரகாஷ் பயிற்சியைத் துவக்கி வைத்துப் பேசுகையில், மானிய திட்டங்கள், நுண்ணீர் பாசனம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஒன்றிணைந்து எவ்வாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்து விளக்கினார்.
 துணை வேளாண்மை அலுவலர் கஸ்பா ராஜ், உழவர் ஆர்வலர் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழு பதிவேடுகளை சரிவர பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஈரோடு அக்காஸ் நிறுவனத் துணைத் தலைவர் முரளிதரன் பேசுகையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் தேர்வு, நிலக்கடலை, சோளம், பயறுவகை பயிர்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது குறித்துப் பேசினார்.
 உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன் உழவன் செயலி பற்றி கூறினார். பயிற்சியில் இலுப்புலி மற்றும் புள்ளாகவுண்டம்பட்டி கிராம கூட்டுப் பண்ணையம் குழு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராஜ்குமார், பரமசிவம் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா செய்திருந்தனர். கிருபா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT