ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.36.91 லட்சம் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. அதில் ரூ.36 லட்சத்து 91 ஆயிரத்து 591 காணிக்கை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். இதன்படி உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் உமாதேவி, ரமேஷ், தமிழரசு, தக்கார் வெங்கடேஷ், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் வங்கியாளர்கள் மூலம் எண்ணப்பட்டது.
இதில் ரூ.36 லட்சத்து 91 ஆயிரத்து 591, 4 கிராம் தங்கம், 44 கிராம் வெள்ளி இருந்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன் கடந்த ஜூன் 26-ஆம் தேதி உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது, அதில் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்து 577, 11 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com