நாமக்கல்

முத்தலாக் அவசர சட்டத்துக்கு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

DIN

முத்தலாக் அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெறவுள்ள திருக்குர்ஆன் மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம் மாநில செயலர் முஜிப்ரகுமான் தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. மேலாண்மைக்குழு உறுப்பினர் முகம்மது அலி மாநாடு குறித்து பேசினார். மாவட்டத் தலைவர் அலாவுதீன் வரவேற்றார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஓரினச்சேர்க்கை முறைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். முத்தலாக் அவசர சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்லாமியர்களை சிறைக்கு தள்ளும் நோக்கில் இந்த சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டம் தெரிவிக்கப்படுகிறது.  விழுப்புரத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் திருக்குர்ஆன் மாநில மாநாட்டுக்கு அதிகளவில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அமைப்பினர் கலந்துகொள்வது. இதில், மாவட்டச் செயலர் கமல் உசேன், துணைச் செயலர் ரிஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT