திருச்செங்கோட்டில்  சின்னஓங்காளியம்மன் கோயில் தீர்த்தக்குட ஊர்வலம்

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சின்னஓங்காளியம்மன் கோயில் மாசிக்குண்டம் விழாவை முன்னிட்டு

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சின்னஓங்காளியம்மன் கோயில் மாசிக்குண்டம் விழாவை முன்னிட்டு பக்தர்களின் தீர்த்தக்குட ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் மாசி குண்டம் திருவிழா வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது .இந்த திருவிழாவின் முதல் நிகழ்வான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தீர்த்தக்குட  ஊர்வலம் நடைபெற்றது. குண்டம் இறங்கும் பக்தர்கள் திருச்செங்கோடு மலையடி குட்டையில் இருந்து தீர்த்தம் எடுத்து நாமக்கல் சாலை வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க கோயிலை வந்தடைந்தனர். தீர்த்தக் குட ஊர்வலத்தை தொடர்ந்து வரும் நாள்களில் அம்மன் அழைத்தல், அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்துதல், சங்காபிஷேகம், உள்ளிட்ட  பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாசி குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும்19-ஆம் தேதி தேதி நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com