நாமக்கல்

பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி தெருமுனைப் பிரசாரம்

DIN

பரமத்தி வேலூரில் பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்) நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யக்கோரி அந் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பரமத்தி வேலூர் பகுதியில் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர் காமராஜர் சிலை, சிவா தியேட்டர் நான்குசாலை, நான்குசாலை ஆகிய பகுதிகளில் 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யக் கோரி பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெருமுனைப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தெருமுனைப் பிரசாரத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த குழந்தைசாமி,  ஒப்பந்த ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த வேலுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் தங்கராஜ்,மாவட்ட உதவிச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை வழியுறுத்தி பேசினர். இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலாண்மைக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தேவையான பொருளாதார உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
தெருமுனைப் பிரசாரத்தில் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT