எருமப்பட்டியில் ரூ.2.64 கோடியில் புதிய ஒன்றிய அலுவலகக் கட்டடம்

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.2.64 கோடியில் புதிய ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.2.64 கோடியில் புதிய ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய அலுவலகக் கட்டடம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து, அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன், சட்டப்பேரவையில் எடுத்துரைத்து புதிய ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான நிதியை பெற்றார்.
இதைத் தொடர்ந்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2.64 கோடியில் எருமப்பட்டி புதிய ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கான விழாவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தார்.
விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். கிராம வளர்ச்சி அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியச் செயலர் பட்டு (எ) பத்மநாபன், ஒன்றிய செயலர் வரதராஜன், நகர செயலர் ராஜேந்திரன், பேரூர் செயலர் பாலு, ஒன்றியப் பொறியாளர்கள் சாந்தி, குணசேகரன் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com