பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் திங்கள்கிழமை பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அத்துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன், மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிர்வாகம் முன்மொழிந்தபடி 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல்-ன் சொத்துகளை மாற்றிக் கொடுப்பதை விரைந்து முடிக்க வேண்டும். செல்லிடப்பேசி கோபுரங்களை பராமரிக்க வெளிநபர்களிடம் பணி ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com