ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி,  உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் வெண்ணந்தூர் ஊராட்சி

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி,  உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் துப்புரவாளர்கள், தண்ணீர் தொட்டி ஆபரேட்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தண்ணீர் டேங்க் ஆபரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு,  மூன்றாண்டு பணி முடித்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.  1 .10 .2017 முதல் பணி ஓய்வு பெற்ற துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசாணை எண் 303 -இன் படி மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்க வேண்டும்.  7-ஆவது ஊதியக்குழு கணக்கீட்டின்படி சம்பளம் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தண்ணீர் தொட்டி சுத்தம் செய்வதற்கு மாதம் ஆயிரம் வழங்க வேண்டும்.  தூய்மைக் காவலர்களுக்கு மாதா மாதம் நிலுவை இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள்,   ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com