நாமக்கல்

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது: 37 பவுன் நகை, கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 37 பவுன் நகை, கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி காவல் நிலையத்துக்குள்பட்ட வெள்ளாளபாளையம், பாரதி நகரில் நடராஜன் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு, வேலூர் காவல் நிலையத்துக்குள்பட்ட படமுடிபாளையம், ஜெ.ஜெ. நகரில் ரவி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு, நாமக்கல் காவல் நிலையத்துக்குள்பட்ட காவேட்டிபட்டி, மகரிஷி நகர் நடராஜன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை திருட்டு, பேளுக்குறிச்சி காவல் நிலையத்துக்குள்பட்ட சிங்களாந்தபுரம், காந்தி நகர் தங்கவேல் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகை திருட்டு உள்ளிட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டார்.
அதன்பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வேலூர் காவிரி பாலம் பகுதியில் வேலூர் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக கரூரில் இருந்து வேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், போலீஸாரைக் கண்டவுடன் தப்பியோட முயன்றனர். இதையறிந்த போலீஸார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், திருச்சி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் துரைசாமி (38), அவரது சகோதரர் சோமு (எ) சோமசுந்தரம் (28) மற்றும் மதுரை மாவட்டம், சம்பாகுளம் கே.புதூரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் பிரேம்குமார் (30) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், மூன்று பேரும் நாமக்கல், காவேட்டிப்பட்டி, மகரிஷி நகர், பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையம், பாரதிநகர்,வேலூர் அருகே உள்ள படமுடிபாளையம், ஜெ.ஜெ.நகர், பேளுக்குறிச்சி, சிங்களாந்தபுரம் காந்தி நகரில் உள்ள வீடுகளில் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 37 பவுன் தங்க நகைள், கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT