நாமக்கல்

அரசுக் கல்லூரியில் திருவள்ளுவர் தின விழா

DIN

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
30-ஆம் ஆண்டாக நடைபெற்ற விழாவில்,  கல்லூரி முதல்வர் சீ. மணிமேகலை தலைமை வகித்தார். கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவரும், முன்னாள் மாணவர் சங்கச் செயலாளருமான முனைவர் இரா. சிவக்குமார் வரவேற்றார்.
முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் முனைவர் சி.ஆர். ரமணிகோபால், இயற்பியல் துறைப் பேராசிரியரும், முன்னாள் மாணவர் சங்கத் துணைத் தலைவருமான பெ. துரைசாமி, முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலர் வி. சந்திரசேகரன், அண்ணாமலை பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பி. சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் முழு உருவச் சிலைக்கு கல்லூரி முதல்வர் சீ. மணிமேகலை,  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுதில்லி டெலிகாம் பொதுமேலாளர் பி.ஏ. தங்கவேலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திருக்குறள் வாசிக்கப்பட்டது.
ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் பள்ளிகளான இரா. புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றின் மாணவ மாணவியர்களிடையே "குறள் காட்டும் சமுதாயம்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும்  "இக்கால உலகுக்கு திருக்குறளின் தேவை' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் திருக்குறள் நூல் போன்வற்றை கல்லூரி முதல்வர் சீ. மணிமேகலை, சிறப்பு விருந்தினர் பி.ஏ.தங்கவேலு ஆகியோர் வழங்கினர்.
விழாவில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். முத்துநல்லியப்பன், முன்னாள் மாணவர்கள் ஆர். ரங்கசாமி, கே.சக்திவேல், எம். திருக்குமரன், கே. அசோகன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
முன்னாள் மாணவர் சங்க கட்டட நிதியாக 1998-2001-ல் பயின்ற மாணவர்கள் சார்பில் ரூ. 40 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது.
முனைவர் பி. சக்திவேல் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படையினர்  செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT