நாமக்கல்

ராசிபுரம், பரமத்தி வேலூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

DIN

ராசிபுரம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் 102 - வது பிறந்தநாள் விழா நகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் நகர அதிமுக சார்பில் நகர அதிமுக செயலர் எம். பாலசுப்பிரமணியம் தலைமையில் 27 -வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டன. பின்னர் பயனாளிகளுக்கு, வேட்டி சேலை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதில் நகர நிர்வாகிகள் ஆர்.கோபால், எஸ்.வெங்கடாஜலம், வி.கே.ஆர்.கே. ராமசாமி, ஆர்.எஸ்.ரங்கசாமி, ராதாசந்திரசேகரன், எஸ்.பி.கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமமுக: இதேபோல் ராசிபுரம் நகரம், வெண்ணந்தூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 27 வார்டுகளிலும் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகர அமமுக செயலர் வி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர் பி. சம்பத்குமார் பங்கேற்று, கொடியேற்றி பேசினார்.
இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவர் வி.திருப்பதி, மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் ஏ.பி.பழனிவேல், மாநில வர்த்தக அணி இணைச் செயலர் கே.ஆர். நல்லியப்பன், வெண்ணந்தூர் ஒன்றியச் செயலர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமமுக-வினருக்கு அனுமதி மறுப்பு
பாண்டமங்கலத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு சேவல்கட்டு மூலை பகுதியில் அமமுக மாவட்டச் செயலாளர் சாமிநாதன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அவர்களை கபிலர்மலை அதிமுக- ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிமுக-வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அ.ம.மு.க தொண்டர் ஒருவர் தீக்குளிப்பதாக கூச்சலிட்டதையடுத்து அப்பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
தகவல் அறிந்துவந்த பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து இருதரப்பினரிடையே பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால்  அமமுக-வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு கீழே அவரது  உருவப் படத்தை நாற்காலியில் வைத்து மாலை அணிவித்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT