உலக கொங்கு தமிழர் மாநாட்டை வரலாற்று நிகழ்வாக நடத்தி காட்டவுள்ளோம்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

நாமக்கல்லில் நடக்கவுள்ள உலக கொங்கு தமிழர் மாநாட்டை வரலாற்று நிகழ்வாக நடத்திக் காட்ட உள்ளோம் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்


நாமக்கல்லில் நடக்கவுள்ள உலக கொங்கு தமிழர் மாநாட்டை வரலாற்று நிகழ்வாக நடத்திக் காட்ட உள்ளோம் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் உலக கொங்கு தமிழர் மாநாடு ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், காளிங்கராயன் படத்துக்கு மலரஞ்லி செலுத்திவிட்டு தெரிவித்ததாவது:
முதல் உலக கொங்கு தமிழர் மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. இதையடுத்து நாமக்கல்லில் தற்போது நடக்கவுள்ள உலக கொங்கு தமிழர் மாநாட்டை வரலாற்று நிகழ்வாக நடத்திக் காட்ட உள்ளோம். 26 நாடுகளிலிருந்து கொங்கு தமிழர்கள் வர உள்ளனர். அவர்களது தொடர்புகளை விரிவுப்படுத்தி நமது இளைஞர்களுக்கு வேலை , கல்வி, வியாபாரம் ஆகிவற்றுக்கான வாய்ப்புக்களை பெற்றுத் தருவதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். மேலும், மத்திய அரசு விசாவுக்கான கட்டணத்தை குறைக்கும்படி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.
சில மாதங்களுக்கு முன்பு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த நீரைத் தேக்கி வைக்க எந்த முயற்சியையும் ஆட்சியில் இருப்பவர்கள் எடுக்காத காரணத்தால் தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து ஏரி, குளங்களில் தேக்கி இருக்கலாம். மக்களவைத் தேர்தல் நடைபெறும் போது குடிநீர் பிரச்னை பெரிதாகி தேர்தலில் எதிரொலிக்கும். மாநாட்டுக்குப் பிறகு எங்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பல கட்சிகளின் தேர்தல் நிலைப்பாடு தெரியவரும்.
2014-இல் பெரும் எதிர்பார்ப்போடு மோடி பிரதமராக பாடுபட்டோம். நதிகள் இணைக்கப்படும் என்று அப்போது அவர் பேசினார். ஆனால் முன்னேறிவிட்டோம் என்று அறிக்கைதான் தற்போது வருகிறதே தவிர யதார்த்தத்தில் அந்த மாதிரி இல்லை.
கொடநாடு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த நிலையை அவர்தான் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு பற்றி யாருக்கும் முழுமையாக தெரியவில்லை. ஊழல் நடந்திருந்தால் அது தவறுதான். அதனை கொ.ம.தே.க. எதிர்க்கும்
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com