குட்கா வழக்கில் பிணையில் வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை

பரமத்தி வேலூர் அருகே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்


பரமத்தி வேலூர் அருகே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவர் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பரமத்தி வேலூர் பகுதியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் போலீஸார் வடக்கு நல்லியாம்பாளையம் அருகே உள்ள சுண்டப்பானை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சரக்கு ஆட்டோக்களை சோதனை மேற்கொண்டனர். இதில் 42 மூட்டைகளில் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் பாரதி நகரைச் சேந்த மினி ஆட்டோ ஓட்டுநர்களான விக்னேஷ் (22), கரூர் மாவட்டம் மண்மங்கலம், மோதுக்காடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் மதன்குமார் (24) மற்றும் பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம்புதூரைச் சேர்ந்த கந்தசாமி மகன் முத்துக்குமார் (39) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இதேபோல் கீழ்பாலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 குட்கா மூட்டைகள் மற்றும் 6 பெட்டிகள் கொண்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக பரமத்திவேலூர் கண்டர் நகரைச் சேர்ந்த விஜய் (எ) ராமலிங்கம் (35) என்பவரை மோகனூர் போலீஸார் கைது செய்தனர்.இவர்கள் நான்கு பேரும் போலீஸார் விசாரணைக்கு பின்பு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து பிணையில் வந்த பரமத்திவேலூர் கண்டர் நகரைச் சேர்ந்த கோபால் மகன் விஜய் (எ) ராமலிங்கம் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வீட்டில் சேலையில் தூக்கிட்டு உயிரிழந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி புனிதா (32) மற்றும் உறவினர்கள் பரமத்திவேலூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com